< Back
மாநில செய்திகள்
சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரெயில் மோதி தொழிலாளி பலி
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரெயில் மோதி தொழிலாளி பலி

தினத்தந்தி
|
20 Nov 2022 10:21 PM IST

சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரெயில் மோதி தொழிலாளி பலியானார்.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட விஞ்சியம் பாக்கம், ஈஸ்வரி நகரை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 55). கூலித்தொழிலாளி. இவரது வீடு புதியதாக அமைக்கப்பட்ட 3-வது ரெயில்வே தண்டவாளத்தின் அருகிலேயே அமைந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல இவர் வெளியே செல்ல தண்டவாளத்தை கடக்க முயன்றபோது நாகர்கோவில் இருந்து-தாம்பரம் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் இவர் மீது மோதியது. இதில் சந்திரசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்