செங்கல்பட்டு
அச்சரப்பாக்கம் அருகே கடன் தொல்லையால் கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை
|அச்சரப்பாக்கம் அருகே கடன் தொல்லையால் கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
கடன் தொல்லை
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ஜோதி (வயது 47). குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி அதை அதிக வட்டிக்கு விட்டு வந்த நிலையில் வருக்கு கடன் அதிகரித்ததாக தெரிகிறது. கடன் தொல்லையால் மன உளைச்சலுக்குள்ளான நிலையில் காணப்பட்டார்.
தற்கொலை
இந்த நிலையில் மேல்மருவத்தூர் அடுத்த சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை மருவூர் அவென்யு தனியார் குடியிருப்பு பகுதியில் உள்ள கிணற்றுக்கு மேல் 2 செல்போன்கள், மோட்டார் சைக்கிள் சாவி, பணம் வாங்கல், கொடுக்கலுக்கான கணக்கு புத்தகம் போன்றவற்றை கரைக்கு மேல் வைத்துவிட்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தகவல் அறிந்த அச்சரப்பாக்கம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.