< Back
மாநில செய்திகள்
பெரியகுளத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தேனி
மாநில செய்திகள்

பெரியகுளத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
26 Oct 2023 3:00 AM IST

பெரியகுளத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 29). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள். இந்தநிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது மாரியப்பன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தென்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மாரியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாரியப்பன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்