< Back
மாநில செய்திகள்
சாலையில் நடந்து சென்ற பெண்ணை வழிமறித்து கத்திக்குத்து
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

சாலையில் நடந்து சென்ற பெண்ணை வழிமறித்து கத்திக்குத்து

தினத்தந்தி
|
17 Sept 2023 12:30 AM IST

கொள்ளிடம் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணை வழிமறித்து கத்தியால் குத்திய கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கொள்ளிடம்;

கொள்ளிடம் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணை வழிமறித்து கத்தியால் குத்திய கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

வேன் டிரைவர்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே திட்டுப்படுகை கிராமத்தைச் சேர்ந்த பன்னீர். இவருடைய மகன் வேலு(வயது35). வேன் டிரைவர். இவருடைய மனைவி மகாலட்சுமி (30). வேலு தனது மனைவியிடம் அடிக்கடி பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.நேற்று முன்தினம் கொள்ளிடம் அருகே திட்டுபடுகை கிராமத்திலிருந்து கொள்ளிடம் நோக்கி சாலையில் தண்டேசநல்லூர் என்ற இடத்தில் மகாலட்சுமி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மகாலட்சுமியை, வேலு வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

வழக்குப்பதிவு

அப்போது மகாலட்சுமி பணம் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த வேலு தான் கையில் வைத்திருந்த கத்தியால் மகாலட்சுமியை குத்தி விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. கத்திக்குத்தில் காயமடைந்த மகாலட்சுமி சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வேலு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்