< Back
மாநில செய்திகள்
டீக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது
கரூர்
மாநில செய்திகள்

டீக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது

தினத்தந்தி
|
21 Dec 2022 12:08 AM IST

டீக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

கரூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு டீக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மறைத்து வைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கரூர் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது சம்பந்தப்பட்ட டீக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 2¼ கிலோ புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தடை செய்யப்பட்டபுகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்த பிரம்மதீர்தம்ரோடு பகுதியை சேர்ந்த லதா(வயது 38) என்பவரை பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இதுகுறித்து கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தெரிவிக்கையில் சட்ட விரோதமாக பொதுஇடங்கள், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற இடங்களுக்கு அருகே புகையிலை பொருட்களை வைத்து விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். மேலும் இதுகுறித்து 9498188488 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்