< Back
மாநில செய்திகள்
வீட்டில் பதுக்கி வைத்து சாராயம் விற்ற பெண் கைது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

வீட்டில் பதுக்கி வைத்து சாராயம் விற்ற பெண் கைது

தினத்தந்தி
|
23 March 2023 2:48 PM IST

நெமிலி கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைத்து சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், நெமிலி கிராமத்தில் வசிக்கும் சிலர் ஆந்திராவில் இருந்து கள்ளச்சாராயம் வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் தேவிகா தலைமையிலான போலீசார் நெமிலி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது நெமிலி இருளர் காலனி பகுதியைச் சேர்ந்த சின்னதுரை மனைவி கன்னியம்மாள் (வயது 60) என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது வீட்டின் பின்புறத்தில் பிளாஸ்டிக் பையில் 10 லிட்டர் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து கன்னியம்மாளை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்