< Back
மாநில செய்திகள்
சேலத்தில் செவிலியர் எனக் கூறி குழந்தையை கடத்திய பெண்
மாநில செய்திகள்

சேலத்தில் செவிலியர் எனக் கூறி குழந்தையை கடத்திய பெண்

தினத்தந்தி
|
9 Aug 2024 5:46 PM IST

குழந்தையை, பெண் ஒருவர் தூக்கிச்செல்லும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சேலம்,

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த வெண்ணிலா - தங்கதுரை தம்பதிக்கு கடந்த 5ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. பிறந்து 5 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை, செவிலியர் எனக் கூறி பெண் ஒருவர் கடத்திச் சென்றுள்ளார்.

குழந்தையின் கண்கள் மஞ்சளாக உள்ளது எனக் கூறி தாயிடம் இருந்து குழந்தையை அந்தப்பெண் தூக்கிச் சென்றுள்ளார். குழந்தையுடன் அந்த பெண் மாயமான நிலையில், நிலைமையை உணர்ந்த குழந்தையின் பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். குழந்தையை, பெண் ஒருவர் தூக்கிச்செல்லும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளை கொண்டு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்