< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பெண்... கயிறு கட்டி பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்
|10 Nov 2022 11:45 AM IST
சென்னை மூலக்கடை பகுதியில், 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்புத்துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
சென்னை,
சென்னை மூலக்கடை பகுதியில், 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்புத்துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
விஜயலட்சுமி என்பவர் பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது, இயற்கை உபாதையை கழிப்பதற்காக அருகில் உள்ள இருட்டான பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த சுற்றுச்சுவர் இல்லாத 40 அடி ஆழமுள்ள பாழடைந்த கிணற்றில் விஜயலட்சுமி தவறி விழுந்துள்ளார்.
அவரது சத்தம் கேட்டு பார்த்த மக்கள், தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், விஜயலட்சுமியை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.