< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பாம்பு கடித்ததால் மருத்துவமனைக்கு வந்த பெண் - பாம்பையும் எடுத்து வந்ததால் பரபரப்பு
|2 Nov 2023 8:01 PM IST
தூத்துக்குடியில் தன்னை கடித்த பாம்போடு அரசு மருத்துவமனைக்கு வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே முதலூரை சேர்ந்த அழகுராணி என்ற பெண், பாம்பு கடித்ததாக கூறி, முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அப்போது தன்னை கடித்த பாம்பு எனக் கூறியவாறு, ஒரு பிளாஸ்டிக் பையில் பாம்பை கொண்டு வந்துள்ளார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான மருத்துவமனை ஊழியர்கள், பாம்பு உயிருடன் இல்லை என்பதை அறிந்து நிம்மதியடைந்தனர்.
இதையடுத்து அது என்ன வகையான பாம்பு என்பதை ஆராய்ந்து, அதற்கு ஏற்றவாறு பெண்ணுக்கு சிகிச்சை அளித்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக அந்த பெண், நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.