திருவள்ளூர்
துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி
|கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிளில் துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது லாரி மீது மோதி பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.
துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர்
செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ராமகிருஷ்ணன். இவரது மனைவி வசந்தா (வயது62). இவர், நேற்று தனது உறவினர் பட்டாபி (42) என்பவருடன் மோட்டார் சைககிளில் அமர்ந்து கும்மிடிப்பூண்டி அடுத்த குமரநாயக்கன் பேட்டையில் உள்ள உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருந்தார்.
கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையான சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் ஒன்றில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அதே திசையில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று எதிர்பாரதவிதமாக திடீரென பிரேக் போட்டு நின்றதாக கூறப்படுகிறது.
பலி
அப்போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி லாரியின் பின்னால் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட வசந்தா தலையில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற உறவினர் பட்டாபி லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். இதுகுறித்த தகவலின் பேரில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வசந்தா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சப்-இஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.