< Back
தமிழக செய்திகள்

திருவள்ளூர்
தமிழக செய்திகள்
தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் மோதி பெண் பலி

26 Nov 2022 2:49 PM IST
திருநின்றவூர் வேப்பம்பட்டு ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் ரெயில் மோதி பலியானார்.
திருவள்ளூர் அடுத்த திருநின்றவூர் வேப்பம்பட்டு ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று முன்தினம் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் மோதி உடல் சிதறி சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார். இறந்த பெண் யார், அவர் எந்த ஊரை சேர்ந்தவர் போன்ற விவரங்கள் தெரியவில்லை. அந்த பெண் பிங்க் கலரில் நைட்டி அணிந்திருந்தார். இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.