திருவள்ளூர்
பள்ளிப்பட்டு அருகே சாலையில் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிள் மோதி பெண் படுகாயம்
|பள்ளிப்பட்டு அருகே சாலையில் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிள் மோதி பெண் படுகாயமடைந்தார்.
பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் அம்மையார் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 55). இவரது மனைவி முனியம்மாள் (45). நேற்று முன்தினம் இரவு முனியம்மாள் அம்மையார் குப்பம் கூட்ரோடு அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர் முனியம்மாள் மீது மோதி விட்டு தப்பி சென்றார். இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட முனியம்மாள் படுகாயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து முனியம்மாள் உறவினரான சங்கரன் (48) என்பவர் ஆர்.கே. பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து முனியம்மாளின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரை வலை வீசி தேடி வருகின்றனர்.