< Back
மாநில செய்திகள்
ஓடும் ரெயிலில் கைக்குழந்தையுடன் ஏற முயன்று தவறி விழுந்த பெண்
மாநில செய்திகள்

ஓடும் ரெயிலில் கைக்குழந்தையுடன் ஏற முயன்று தவறி விழுந்த பெண்

தினத்தந்தி
|
13 Nov 2023 2:43 PM IST

கைக்குழந்தையுடன் ஓடும் ரெயிலில் ஏற முயன்ற வடமாநில பெண் ரெயில் பெட்டிக்கும் நடைமேடைக்கும் இடையே தவறி விழுந்தார்.

திருப்பூர்,

ஓடும் ரெயிலில் கைக்குழந்தையுடன் ஏற முயன்ற வடமாநில பெண் ரெயிலில் இருந்து தவறி விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

தீபாவளி பண்டிகையை ஒட்டி கோவைக்கு சுற்றுலா வந்த காயத்ரி என்ற வடமாநில பெண் உறவினர்களுடன் பின்னர் திருப்பூர் சென்றுள்ளார். திருப்பூரிலிருந்து சென்னை செல்ல திட்டமிட்ட அவர்கள், அதிகாலை 3 மணியளவில் சென்னை செல்லும் ரெயிலில் அவசர கதியில் ஏறியுள்ளனர்.

அப்போது கைக்குழந்தையுடன் ஓடும் ரெயிலில் ஏற முயன்ற காயத்ரி, ரெயில் பெட்டிக்கும் நடைமேடைக்கும் இடையே தவறி விழுந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் கைக்குழந்தையை மீட்டனர். பின்னர் ரெயில் நிறுத்தப்பட்டு காயத்ரி படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.

மேலும் செய்திகள்