< Back
மாநில செய்திகள்
ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த வாலிபரை பிடிக்க சென்ற போலீசார் மீது மண்எண்ணெய் ஊற்றிய பெண்
சென்னை
மாநில செய்திகள்

ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த வாலிபரை பிடிக்க சென்ற போலீசார் மீது மண்எண்ணெய் ஊற்றிய பெண்

தினத்தந்தி
|
1 Oct 2022 9:14 AM IST

ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த வாலிபரை பிடிக்க சென்ற போலீசார் மீது மண்எண்ணெய் ஊற்றிய பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை அரும்பாக்கம், ராமசாமி ராஜா தெருவைச் சேர்ந்தவர் வினோத் என்ற ஆர்ச் வினோத் (வயது 31). அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர், ஆயுதங்களுடன் சுற்றி திரிவதாக வந்த தகவலையடுத்து அமைந்தகரை சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

அப்போது வினோத், போலீசாரை தள்ளிவிட்டு அவரது வீட்டுக்குள் தப்பி ஓடிவிட்டார். போலீசார் அவரை பிடிக்க சென்றபோது வினோத்தின் தாயார் லதா (55) என்பவர் போலீசாரை தடுத்து நிறுத்தியதுடன், தான் கையில் வைத்து இருந்த மண்எண்ணெயை சப்-இன்ஸ்பெக்டர் குமார் மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தி விடுவதாக மிரட்டினார்.

உடனே சுதாரித்து கொண்ட போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் மீது தண்ணீரை ஊற்றி அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது தொடர்பாக லதாவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்