< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த ெதாழிலாளி சாவு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த ெதாழிலாளி சாவு

தினத்தந்தி
|
3 July 2023 12:23 AM IST

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த ெதாழிலாளி இறந்தார்.

விராலிமலை தாலுகா வானத்திராயன்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா மகன் கிருஷ்ணா (வயது 47). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் விராலிமலைக்கு வந்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். விராலிமலை தெப்பக்குளம் அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளிலிருந்து அவர் கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணா நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்