< Back
மாநில செய்திகள்
ஆரணி கோவிலில் வழிபாடு செய்தபோது கற்பூர தீ சேலையில் பற்றி உடல் கருகிய பெண் சாவு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

ஆரணி கோவிலில் வழிபாடு செய்தபோது கற்பூர தீ சேலையில் பற்றி உடல் கருகிய பெண் சாவு

தினத்தந்தி
|
1 Jun 2023 2:13 PM IST

ஆரணி கோவிலில் வழிபாடு செய்தபோது கற்பூர தீ சேலையில் பற்றி உடல் கருகிய பெண் பரிதாபமாக இறந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி பஜார் வீதியில் வசித்து வந்தவர் வரலட்சுமி (வயது 58). நேற்று முன்தினம் காலை ஆரணி கும்மடம் தெருவில் உள்ள பவானி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். கோவிலில் கற்பூரம் ஏற்றி வழிபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக இவரது சேலையில் தீப்பிடித்தது.

அப்போது காற்று பலமாக வீசியது. இதனால் சேலையில் தீ மளமளவென பற்றி உடல் கருகி அலறி துடித்தார்.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து வரலட்சுமியின் மகள் சுசீலா ஆரணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்