< Back
மாநில செய்திகள்
புளியந்தோப்பில் லாரி சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பெண் சாவு
சென்னை
மாநில செய்திகள்

புளியந்தோப்பில் லாரி சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பெண் சாவு

தினத்தந்தி
|
10 Dec 2022 11:51 AM IST

புளியந்தோப்பில் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

சென்னை வியாசர்பாடி பாலகிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் நிர்மலா (வயது 39). இவர், அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று காலை கோயம்பேடு சென்று காய்கறி வாங்குவதற்காக ரமேஷ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

புளியந்தோப்பு ஆட்டுத்தொட்டி அருகே சென்ற போது பின்னால் வந்த லாரி இவர்களது இருசக்கர வாகனத்தில் உரசியது. இதில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த நிர்மலா, நிலைதடுமாறி சாலையில் விழுந்தார்.

அவர் மீது லாரியின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய நிர்மலா, தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், பலியான நிர்மலா உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த லாரி டிரைவர் மற்றும் கிளீனரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பலியான நிர்மலாவுக்கு நிசா(20), ராஜேஸ்வரி(19) என 2 மகள்கள் உள்ளனர். இவருடைய கணவர் வேணுகோபால் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். தாயின் உடலை பார்த்து மகள்கள் இருவரும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

மேலும் செய்திகள்