< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
தென்பெண்ணையாற்றில் குதித்து பெண் தற்கொலை முயற்சி
|8 Aug 2022 11:11 PM IST
தென்பெண்ணையாற்றில் குதித்து பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
மூங்கில்துறைப்பட்டு,
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள அகரம்பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் செல்வம் மனைவி திவ்யா (வயது 25). இவர் மூங்கில்துறைப்பட்டு மேம்பாலத்தில் இருந்து தென்பெண்ணையாற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதைபார்த்த அப்பகுதி மக்கள் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மூங்கில்துறைப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து மூங்கில்துறைப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,