< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
டி.என்.பாளையம் அருகே தோட்டங்களில் சுற்றித்திரியும் காட்டு யானை; பொதுமக்கள் அச்சம்
|24 July 2023 1:24 AM IST
டி.என்.பாளையம் அருகே தோட்டங்களில் சுற்றித்திரியும் காட்டு யானை; பொதுமக்கள் அச்சம்
டி.என்.பாளையம்
டி.என்.பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கொங்கர்பாளையம் ஊராட்சி குண்டேரிப்பள்ளம் அணைப்பகுதியில் நேற்று அதிகாலை வனப்பகுதியை விட்டு ஒரு காட்டு யானை வெளியேறியது. பின்னர் அந்த யானை பங்களாப்புதூர் வழியாக எருமைக்குட்டை, அண்ணாநகர் பகுதிகளில் உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்தது
இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் யானையை அங்கிருந்து விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்கள். ஆனால் அங்கிருந்து செல்லவில்லை. ேதாட்டங்களிலேயே சுற்றி திரிந்து வருகிறது.
பின்னர் இதுபற்றி பொதுமக்கள் டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். தோட்டங்களில் காட்டு யானை சுற்றி திரிவதால் அந்த பகுதி மக்கள்் அச்சத்தில் உள்ளனர்.