< Back
மாநில செய்திகள்
ஆசனூர் அருகே வாகனங்களை வழிமறித்த காட்டு யானை
ஈரோடு
மாநில செய்திகள்

ஆசனூர் அருகே வாகனங்களை வழிமறித்த காட்டு யானை

தினத்தந்தி
|
16 Sept 2023 2:46 AM IST

ஆசனூர் அருகே வாகனங்களை வழிமறித்த காட்டு யானை

தாளவாடி

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனப்பகுதி வழியாக திண்டுக்கல்- மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நிலையில் நேற்று மாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தது. பின்னர் அந்த யானை, அங்கு நின்று கொண்டு கரும்பு லாரி வருகிறதா? என சாலைைய வழிமறித்தபடி நின்று கொண்டிருந்தது.

யானையை கண்டதும் வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை சிறிது தூரத்திலேயே நிறுத்தி விட்டனர். இதனால் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 15 நிமிடத்துக்கு பின்னர் யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதைத்தொடர்ந்து வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்றனர். சாலையை வழிமறித்த யானையால் திண்டுக்கல்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் 15 நிமிட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்