< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
குன்னூரில் பண்ணைக்குள் புகுந்து பலா பழங்களை தின்று அட்டகாசம் செய்த காட்டு யானை
|26 Jun 2022 10:48 AM IST
குன்னூரில் உள்ள பர்லியார் அரசு தோட்டக்கலைப் பண்ணைக்குள் காட்டு யானை புகுந்ததால், பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
குன்னூர்,
குன்னூரில் உள்ள பர்லியார் அரசு தோட்டக்கலைப் பண்ணைக்குள் காட்டு யானை புகுந்ததால், பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒன்றை யானை, பர்லியார் தோட்டக்கலைப் பண்ணைக்குள் நுழைந்து, அங்கிருந்த நாற்றுகளை சேதப்படுத்தி, பலா பழங்களை ருசித்து சென்றது.
இதனால், அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், குடியிருப்புக்குள் காட்டு யானை நுழைவதை தடுக்க, வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தினர்.