< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பைக்கில் சென்றவர்களை துரத்திய காட்டு யானை.! அடித்து புடித்து தப்பி சென்ற வாகன ஓட்டிகள்.!
|15 July 2022 10:20 PM IST
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை காட்டு யானை ஆக்ரோசத்துடன் துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை காட்டு யானை ஆக்ரோசத்துடன் துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன.
சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் காட்டு யானைகளின் அருகே வந்து வாகனத்தை நிறுத்தியதால் ஆத்திரமடைந்த குட்டி யானை ஒன்று , அவர்களை ஆவேசத்துடன் துரத்தியது. இதையடுத்து மின்னல் வேகத்தில் வாகனத்தை திருப்பிய அவர்கள், யானையிடம் இருந்து தப்பித்தனர்