< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மாணவர்களை விரட்டிய காட்டு யானை... பதறி ஓடிய குழந்தைகள் - நீலகிரியில் பரபரப்பு
|13 Jan 2024 5:21 AM IST
காட்டு யானையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டக் கோரி மாணவர்களும், பெற்றோரும் வன அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவிகளை ஒற்றை காட்டு யானை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது பகல் மற்றும் இரவு நேரங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், கோடமுலா பகுதியைச் சேர்ந்த மாணவர்கள், நேற்று காலை வழக்கம்போல் தங்களது கிராமத்தில் இருந்து பள்ளிக்கு நடந்து சென்றனர். அப்போது அவர்களை காட்டு யானை விரட்டியதால் ஓட்டம் பிடித்தனர்.
இதனையடுத்து அந்த காட்டு யானையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டக் கோரி மாணவர்களும், பெற்றோரும் வன அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.