< Back
மாநில செய்திகள்
தோட்டத்திற்குள் புகுந்து காட்டெருமை அட்டகாசம்
கரூர்
மாநில செய்திகள்

தோட்டத்திற்குள் புகுந்து காட்டெருமை அட்டகாசம்

தினத்தந்தி
|
26 Aug 2022 12:03 AM IST

தோட்டத்திற்குள் புகுந்து காட்டெருமை அட்டகாசம் செய்தது.

கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம் அருகே மூலிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் விவசாய பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை தோட்டத்திற்குள் வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த காட்டெருமை ஒன்று புகுந்து அட்டகாசம் செய்து அங்கும், இங்கும் சுற்றி வருகிறது. இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

நேற்று மாலை வரை வனத்துறையினர் யாரும் அங்கு வரவில்லை. பின்னர் வேலாயுதம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி விட்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தோட்டத்திற்குள் புகுந்த காட்டெருமையை உடனடியாக பிடித்து செல்ல வேண்டும், வீடுகளுக்குள் காட்டெருமை புகுந்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு விடுவோமா என்றும் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்