விருதுநகர்
நாட்டு வெடிகுண்டு வைத்த பழத்தை தின்ற காட்டுப்பன்றி வாய் சிதறி செத்தது
|நாட்டு வெடிகுண்டு வைத்த பழத்தை தின்ற காட்டுப்பன்றி வாய் சிதறி செத்தது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
நாட்டு வெடிகுண்டு வைத்த பழத்தை தின்ற காட்டுப்பன்றி வாய் சிதறி செத்தது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நாட்டு வெடிகுண்டு
ஸ்ரீவில்லிபுத்தூர் ரெங்கர் கோவில் பகுதியில் காட்டுப்பன்றிகள், செந்நாய்கள், மான்கள் என ஏராளமான வனவிலங்குகள் காணப்படுகின்றன. இந்நிலையில் காட்டுப்பன்றிகள் விரும்பி உண்ணும் பழங்களின் உள்ளே நாட்டு வெடிகுண்டுகளை வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடுவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
உடனே ரேஞ்சர் கார்த்தி தலைமையில் வனத்துறையினர் ரெங்கர் கோவில் பகுதிக்கு சென்று பார்த்தபோது, நாட்டு வெடிகுண்டு வெடித்து வாய் சிதறிய நிலையில் காட்டுப்பன்றி ஒன்று பலியாகிக் கிடந்தது.
கைது
இந்த காட்டுப்பன்றி வேட்டை தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கோபிநாத்(வயது20) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, அவருடன் வந்த வாலிபர் ஒருவர் 5 நாட்டு வெடிகுண்டுகளுடன் தப்பிச் சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த வாலிபர் யார் எனவும் இந்த வேட்டையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.