< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சொத்துக்காக அடியாட்களை ஏவி கணவனை தாக்கிய மனைவி
|4 April 2024 3:19 PM IST
சொத்துகளை அபகரிக்கும் நோக்கில் மனைவி அடியாட்களை ஏவி, தன்னை வீடு புகுந்து தாக்கியதாக கணவன் புகாரளித்துள்ளார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே, சொத்துக்காக கணவனை, மனைவி அடியாட்களை ஏவி தாக்கியதாக போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. ஆனந்த் - இந்துமதி தம்பதி இடையே கருத்து வேறுபாடால் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்த நிலையில், கணவர் தன்னை சித்ரவதை செய்வதாக கூறி இந்துமதி ஏற்கனவே போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் திடீரென ஆனந்தின் வீட்டிற்குள் புகுந்த கும்பல் அவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளது. படுகாயமடைந்த ஆனந்த், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தனது சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் தன் மனைவி அவரின் உறவினர்கள் மூலம் தன்னை வீடு புகுந்து தாக்கியதாக போலீசில் புகாரளித்துள்ளார்.