சிவகங்கை
சிறுதானிய உணவு முறையே ஆரோக்கியமானது
|சிறுதானிய உணவு முறையே ஆரோக்கியமானது என உணவு பாதுகாப்பு அலுவலர் பேசினார்
காரைக்குடி அருகே விசாலயங்கோட்டை கவி கலாம் கிராமத்தில் உள்ள சேது பாஸ்கரா வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் சர்வதேச சிறுதானிய ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கினார். உதவிப்பேராசிரியர் நாகலட்சுமி வரவேற்றார். மாணவி யோகலட்சுமி அறிமுக உரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் பிரபாவதி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தியாகராஜன், சன்சாரியன் மாத்யூ, ஆத்மநாதன், ஜப்பானை சேர்ந்த கல்லூரி மாணவிகள் நமாமி ஒஹஷாஹி மற்றும் ஷாக்ஷி ஷெஹி ஹுட்ஷி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் டாக்டர் பிரபாவதி பேசும்போது, சிறுதானிய உணவு முறையே ஆரோக்கியமானது. துரித உணவு வகைகளின் ஆரோக்கிய கேடுகளையும் அவை நம் உணவு பழக்கவழக்கத்தை எவ்வாறு ஆக்கிரமித்துள்ளன என்றும் எடுத்துரைத்தார். பின்னர் உழவர்கள் மற்றும் மாணவர்கள் கல்லூரி விளைநிலங்களில் பயிரிடப்பட்ட சிறுதானிய பயிர்களை பார்வையிட்டனர். முடிவில் மாணவி தேசிகா நந்தினி நன்றி கூறினார்.