< Back
மாநில செய்திகள்
வினோத நோயால் பாதிக்கப்பட்ட 2 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சக்கர நாற்காலி
திருவாரூர்
மாநில செய்திகள்

வினோத நோயால் பாதிக்கப்பட்ட 2 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சக்கர நாற்காலி

தினத்தந்தி
|
10 Jan 2023 12:15 AM IST

வினோத நோயால் பாதிக்கப்பட்ட 2 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சக்கர நாற்காலி

வினோத நோயால் பாதிக்கப்பட்ட 2 மாற்றுத்திறனாளி குழந்்தைகளுக்கு உதவி கேட்டு திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர் மனு அளித்தனர். உடனடியாக சக்கர நாற்காலி வழங்கி, மருத்துவ உதவி கிடைக்க கலெக்டர் நடவடிக்கை எடுத்தார்.

வினோத நோயால் பாதிப்பு

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பழையனூர் கிராமத்தை சேர்ந்தவர் விமல்ராஜ் (வயது34). விவசாயி. இவரது மனைவி சீதா. இவர்களுக்கு பிறந்த முதல் குழந்தை சில நாட்களில் இறந்துள்ளது. அதேபோல 2-வது குழந்தை மாற்றுத்திறனாளியாக பிறந்து வினோத நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 7 ஆண்டுகளுக்கு பிறகு அந்த குழந்தையும் இறந்தது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் ஓராண்டுக்கு பிறகு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த 2 குழந்தைகளும் வினோத நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. விமல்ராஜ், தினமும் கூலி வேலைக்கு சென்று இந்த 2 குழந்தைகளையும் காப்பாற்றி வருகிறார். இந்த 2 குழந்தைகளுக்கும் மருத்துவ உதவி வழங்க நடவடிக்கை வேண்டும் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அவர்களது பெற்றோர் நேற்று மனு அளித்தனர்.

சக்கர நாற்காலி

இதையடுத்து பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களை நேரில் சந்தித்து மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆறுதல் கூறினார். மேலும் உடனடியாக குழந்தைகளுக்கு சக்கர நாற்காலி வழங்கி, அவர்களுக்கு மருத்துவ உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க மாற்றுத்திறனாளி அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்