< Back
மாநில செய்திகள்
கள்ளக்காதலனுடன் மனைவி ஓடியதால்நெசவு தொழிலாளி தற்கொலைதாரமங்கலம் அருகே பரிதாபம்
சேலம்
மாநில செய்திகள்

கள்ளக்காதலனுடன் மனைவி ஓடியதால்நெசவு தொழிலாளி தற்கொலைதாரமங்கலம் அருகே பரிதாபம்

தினத்தந்தி
|
17 Jan 2023 1:22 AM IST

கள்ளக்காதலனுடன் மனைவி ஓடியதால் மனம் உடைந்த நெசவு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

தாரமங்கலம்,

நெசவு தொழிலாளி

தாரமங்கலம் அருகே ராமிரெட்டிபட்டி சொறையன் வளவு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 29). இவருடைய மனைவி ஊர்வசி (25). இருவரும் நெசவு தொழில் செய்து வந்தனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கணவன்- மனைவி இருவரும் 3 குழந்தைகளுடன் இளம்பிள்ளைக்கு குடிபெயர்ந்தனர்.

இதற்கிடையே ஊர்வசிக்கு வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஊர்வசி கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

உடனே ராஜேந்திரன் தன்னுடைய 3 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ராமிரெட்டிபட்டியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்து விட்டார். அங்கிருந்த அவர், மனம் உடைந்து காணப்பட்டார். எலி மருந்தை தின்று மயங்கி விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய தாய் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ராஜேந்திரனை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரன் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராஜேந்திரனின் தாயார் ஈஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்ததால் மனம் உடைந்த தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.

மேலும் செய்திகள்