< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
நடைப்பயிற்சி சென்றவர் மயங்கி விழுந்து சாவு
|23 Oct 2023 2:01 AM IST
நடைப்பயிற்சி சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 64). ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டரான இவர் கடந்த 20-ந்தேதி நடைபயிற்சி மேற்கொண்டார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் மலையோடை பாலம் அருகே பொன்னுசாமி நடந்து வந்தபோது திடீரென்று மயக்கமடைந்து சாலையின் இடது புறம் விழுந்து கிடந்தார். இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொன்னுசாமி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.