< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தெற்கில் இருந்து வரும் குரல்; இன்று காலை வெளியாகும் முதல்-அமைச்சரின் 2-வது ஆடியோ உரை
|23 Sept 2023 6:12 AM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 2-வது ஆடியோ உரை இன்று காலை 7 மணிக்கு வெளியாக உள்ளது.
சென்னை,
'ஸ்பீக்கிங் பார் இந்தியா' என்ற தலைப்பில் ஆடியோ பதிவு மூலம் தமிழக மக்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடி வருகிறார். அண்மையில் அவரது முதலாவது ஆடியோ உரை வெளியான நிலையில், 2-வது உரை இன்று காலை 7 மணிக்கு வெளியாக உள்ளது.
கடந்த முறை வெளியான ஆடியோ பதிவில், "2024-ம் ஆண்டில் முடியப்போகிற பா.ஜ.க. ஆட்சியில் இந்தியாவை எப்படியெல்லாம் உருக்குலைத்து இருக்கிறார்கள்? எதிர்காலத்தில் நாம் கட்டமைக்க விரும்புகிற சமத்துவ சகோதரத்துவ இந்தியா எப்படி இருக்கும்? என்று ஒரு ஆடியோ வடிவில் பேசப் போகிறேன். அதுக்கு 'ஸ்பீக்கிங் பார் இண்டியா' என்ற தலைப்பு வைத்துக் கொள்ளலாமா? தெற்கில் இருந்து வரும் இந்த குரலுக்காக காத்திருங்கள்" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.