< Back
மாநில செய்திகள்
பஸ்சின் மேற்கூரையில் அமர்ந்து கூச்சலிட்டபடி ஆபத்தான முறையில் பயணித்த இளைஞர்கள் - வெளியான வைரல் வீடியோ
மாநில செய்திகள்

பஸ்சின் மேற்கூரையில் அமர்ந்து கூச்சலிட்டபடி ஆபத்தான முறையில் பயணித்த இளைஞர்கள் - வெளியான வைரல் வீடியோ

தினத்தந்தி
|
20 Aug 2023 10:47 PM IST

நாமக்கல் அருகே தனியார் பஸ்சின் மேற்கூரையில் அமர்ந்து இளைஞர்கள் பயணித்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் அருகே தனியார் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து இளைஞர்கள் பயணித்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் இருந்து பரமத்திவேலூருக்கு சென்ற தனியார் பேருந்தில், படிக்கட்டில் தொங்கியபடியும், பேருந்து மேற்கூரையின் மீது அமர்ந்தும் இளைஞர்கள் பயணித்தனர்.

மேலும் மேற்கூரையில் அமர்ந்திருந்தவர்கள், கூச்சலிட்டபடியும், செல்பி எடுத்தபடியும் பயணித்தனர். தகவலறிந்த போலீசார், பஸ்சை நிறுத்தி டிரைவர் மற்றும் நடத்துனரிடம் விசாரணை நடத்தினர். மேலும் பஸ் கூரையின் மேல் அமர்ந்து பயணித்தவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்