< Back
மாநில செய்திகள்
மாதவரம் அருகே சாலையை சுத்தம் செய்த வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது
சென்னை
மாநில செய்திகள்

மாதவரம் அருகே சாலையை சுத்தம் செய்த வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது

தினத்தந்தி
|
4 Sept 2023 3:08 PM IST

மாதவரம் அருகே சாலையை சுத்தம் செய்த வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமானது.

சென்னையை அடுத்த மாதவரம் பால் பண்ணை மஞ்சம்பாக்கம் கொசப்பூர் 200 அடி சாலையில் நேற்று அதிகாலையில் சாலையின் இரு புறங்களிலும் சாலையை சுத்தம் செய்யும் பணியில் வாகனம் ஈடுபட்டு இருந்தது. திடீரென அந்த வாகனத்தின் என்ஜினில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் அந்த வாகனம் தீப்பிடித்து மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் மாதவரம், மணலி ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் வாகனம் முற்றிலும் எரிந்து சேதமானது. இது குறித்து மாதவரம் பால்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்