ராட்சத காற்றாலை இறக்கை ஏற்றி சென்ற வாகனம் நடுரோட்டில் திடீர் பழுது - ஸ்தம்பித்து போன நெடுஞ்சாலை
|வாகனம் பழுதடைந்ததால், தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பத்தூர்,
சென்னையில் இருந்து ராட்சத காற்றாலை இறக்கையை கனரக வாகனம் ஒன்று தூத்துக்குடி நோக்கி சென்றுகொண்டிருந்தது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சென்றுகொண்டிருந்தபோது அந்த வாகனம் திடீரென பழுதடைந்தது.
சென்னை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள வளையாம்பட்டு மேம்பாலத்தின் மீது சென்ற போது வாகனம் பழுதடைந்ததால், தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சுமார் 5 கிலோ மீட்டருக்கு சாலையில் வாகனங்கள் வரிசைகட்டி நின்றது. இதையடுத்து போலீசார், சாலையை ஒரு வழிப்பாதையாக மாற்றி போக்குவரத்து நெரிசலை சுமார் 3 மணி நேரம் போராடி சீரமைத்தனர். பின்னர் வாகனத்தில் இருந்த பழுது சரிசெய்யப்பட்டு அந்த இடத்தை விட்டு அகற்றப்பட்டது.
இந்த திடீர் போக்குவரத்து காரணமாக காலையில் அந்த வழியாக பள்ளி, அலுவலக பணிகளுக்கு செல்வேர், குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.