< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
கார் மோதி காய்கறி வியாபாரி பலி
|6 Feb 2023 12:30 AM IST
கார் மோதி காய்கறி வியாபாரி பலியானார்.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள காங்கேயன்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(வயது 73). காய்கறி வியாபாரியான இவர் நேற்று காய்கறி வியாபாரம் செய்து விட்டு உடையார்பாளையத்தில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தனது மொபட்டிற்கு பெட்ரோல் போட்டுக்கொண்டு, திருச்சி-சிதம்பரம் சாலையில் வலது புறமாக தனது ஊருக்கு செல்ல முயன்றார். அப்போது மதுரை மாவட்டம் பாலமேடு கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் முரளிதரன்(23) என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக கணேசன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் கைராசி உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.