< Back
மாநில செய்திகள்

சென்னை
மாநில செய்திகள்
திரு.வி.க.நகரில் மரம் சாய்ந்ததால் மினிலோடு வேன் சேதம்

9 May 2023 7:46 AM IST
திரு.வி.க.நகரில் மரம் சாய்ந்ததால் மினிலோடு வேன் சேதம் அடைந்தது.
சென்னை திரு.வி.க. நகர், வேர்க்கடலை சாமி தெருவில் நேற்று மாலையில் சுமார் 50 அடி உயரமுள்ள பழமையான புங்கமரம் திடீரென வேரோடு சாய்ந்தது. அப்போது அங்கு நிறுத்தி இருந்த வெற்றி நகர், வரதராஜன் தெருவைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான மினி லோடு வேன் மீது மரம் விழுந்தது. இதில் மினிலோடு வேன் சேதம் அடைந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் ரமேஷ் தலைமையிலான செம்பியம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து சாலையில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். நல்லவேளையாக மரம் சாய்ந்து விழுந்த நேரத்தில் பொதுமக்கள் யாரும் அந்த வழியாக செல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.