< Back
மாநில செய்திகள்
வண்டலூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி விபத்து; 13 பேர் படுகாயம்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

வண்டலூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி விபத்து; 13 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
5 Jan 2023 3:18 PM IST

வண்டலூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

வேன் மோதியது

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் கோவிலில் இருந்து நேற்று காலை கும்மிடிப்பூண்டி நோக்கி 20 பக்தர்களுடன் ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. வண்டலூர் வெளிவட்ட சாலை அருகே செல்லும்போது திடீரென சாலையோரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் பயங்கரமாக மோதியது. இதில் வேனின் முன் பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது.

13 பேர் படுகாயம்

இதில் வேனில் பயணம் செய்த 12 பெண்கள் உள்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்த 13 பேரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்