< Back
மாநில செய்திகள்
உரமூட்டைகள் ஏற்றி வந்த வேன் கவிழ்ந்தது
கரூர்
மாநில செய்திகள்

உரமூட்டைகள் ஏற்றி வந்த வேன் கவிழ்ந்தது

தினத்தந்தி
|
19 April 2023 12:33 AM IST

உரமூட்டைகள் ஏற்றி வந்த வேன் கவிழ்ந்ததில் டிரைவர் காயம் அடைந்தார்.

நாமக்கலில் இருந்து உரமூட்டைகளை ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி ஒரு சரக்கு வந்து கொண்டிருந்தது. அந்த வேன் வேலாயுதம்பாளையம் அருகே மூலிமங்கலம் பிரிவு சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிரே வந்த ஒரு லாரி உரமூட்டைகளை ஏற்றி வந்த வேன் மீது மோதுவதுபோல் வந்தன. இதனால் உரமூட்டைகளை ஏற்றி வந்த டிரைவர் வேனை திருப்பினார்.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த வேன் சாலையோரம் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த உரமூட்டைகள் கீழே விழுந்தது. மேலும் வேனின் இடிபாடுகளில் சிக்கிய டிரைவர் காயம் அடைந்தார். வேனின் முன்பக்க கண்ணாடியும் சேதமடைந்தது. இதையடுத்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு அந்த வேன் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. பின்னர் மாற்று வேன் மூலம் உர மூட்டைகளை எடுத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்