< Back
மாநில செய்திகள்
திடீரென தீப்பற்றி எரிந்த  இருசக்கர வாகனம் - சென்னை கத்திப்பாரா பாலத்தில் பரபரப்பு
மாநில செய்திகள்

திடீரென தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம் - சென்னை கத்திப்பாரா பாலத்தில் பரபரப்பு

தினத்தந்தி
|
30 April 2023 2:36 PM IST

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

சென்னை,

சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மேலும் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதனையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.வாகனம் தீப்பிடித்து எரிந்தது எப்படி என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்