< Back
மாநில செய்திகள்
இரு தரப்பினர் மோதல்18 பேர் மீது வழக்கு
விழுப்புரம்
மாநில செய்திகள்

இரு தரப்பினர் மோதல்18 பேர் மீது வழக்கு

தினத்தந்தி
|
19 Jan 2023 12:15 AM IST

இரு தரப்பினர் மோதிய சம்பவத்தில் 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சரவணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் மகன் பிரகாஷ் (வயது 35). இவரது குடும்பத்தினருக்கும் இதே ஊரை சேர்ந்த சிவலிங்கம் மகன் சிவகுமார் (25) என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது. சம்பவத்தன்று இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு தாக்கி கொண்டனர். இது தொடர்பாக திருவெண்ணெய்நல்லூர் போலீசில் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் சிவலிங்கம், சிவசங்கர், சிவகுமார், ராகுல் உள்பட 8 பேர் மீதும், அதேபோல் சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் ராஜா, பிரகாஷ், பெரியசாமி, பாலு உள்பட 10 பேர் மீதும் தனித்தனியே போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்