< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை பட்டினப்பாக்கத்தில் கொந்தளிப்புடன் காணப்படும் கடல்
|4 July 2024 5:28 PM IST
கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
சென்னை,
சென்னை பட்டினப்பாக்கத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த ஒரு வார காலமாகவே கடல் சீற்றத்துடன் காணப்படுவதாகவும், ராட்சத அலைகள் எழுவதால் கரையில் இருந்து சுமார் 200 அடி வரை கடல்நீர் மண் பகுதிக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
பலத்த காற்றும் வீசுவதால் வலைகள் சேதமாகி நஷ்டம் ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறிய மீனவர்கள், அப்பகுதியில் தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.