< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து
|28 July 2023 1:27 AM IST
சேரன்மாதேவி அருகே சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி அருகே கல்லூரில் உள்ள ஒரு தனியார் ஆலைக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சரக்கு ஏற்றிக் கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி வந்து கொண்டு இருந்தது. லாரியை தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசையை அடுத்த அழகப்பபுரம் மேட்டுத்தெருவை சேர்ந்த முருகன் மகன் ஜெகநாதன் (வயது 26) என்பவர் ஓட்டினார்.
சேரன்மாதேவி தாமிரபரணி ஆற்றுப்பாலத்தை தாண்டியதும் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் உள்ள வேப்பமரம் மற்றும் மின்கம்பங்கள் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. எனினும் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த சுத்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து டிரைவரை கைது செய்தனர்.