< Back
மாநில செய்திகள்
ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

தினத்தந்தி
|
28 Sept 2023 11:49 PM IST

ஆலங்குடி அருகே ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

லாரி கவிழ்ந்தது

ஆலங்குடியில் இருந்து ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கோவிலூர் கடை தெரு அருகே சென்று கொண்டிருந்தது. லாரியின் பின்னால் தனியார் பஸ் ஒன்றும் சென்று கொண்டிருந்தது. லாரி, பஸ்சும் வேகமான ஒன்றன் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ் டிரைவர் பயணி ஒருவரை ஏற்றுவதற்கான பஸ்சை திடீரென நிறுத்தினார். பின்னால் வந்த லாரி டிரைவர் பஸ்சின் மீது மோதாமல் இருக்க லாரியை திருப்பினார். இதில் எதிர்பாராதவிதமாக டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

போக்குவரத்து பாதிப்பு

இதில் லாரியில் இருந்தவர்கள் காயம் எதுவுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், பொக்லைன் எந்திரம் மூலம் லாரியை அப்புறப்படுத்தினர்.

மேலும் செய்திகள்