< Back
மாநில செய்திகள்
விழுப்புரம் புறவழிச்சாலையில் காலி மதுபாட்டில்கள் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து
விழுப்புரம்
மாநில செய்திகள்

விழுப்புரம் புறவழிச்சாலையில் காலி மதுபாட்டில்கள் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து

தினத்தந்தி
|
17 Jun 2023 12:15 AM IST

விழுப்புரம் புறவழிச்சாலையில் காலி மதுபாட்டில்கள் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சென்னையில் இருந்து காலி மதுபான பாட்டில்களை ஏற்றிக்கொண்டு திருச்சியை நோக்கி நேற்று முன்தினம் இரவு ஒரு லாரி சென்றுகொண்டிருந்தது. இந்த லாரி, நேற்று அதிகாலை 3 மணியளவில் விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் புறவழிச்சாலையில் வரும்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென நடுரோட்டிலேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் லாரியில் இருந்த காலி பாட்டில்கள் சாலையில் சிதறிக்கிடந்தன. இந்த விபத்தினால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் போக்குவரத்து போலீசாரும், தாலுகா போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் மீட்பு வாகனத்தை வரவழைத்து விபத்துக்குள்ளான லாரியை சாலையோரமாக அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.

மேலும் செய்திகள்