< Back
மாநில செய்திகள்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்
மரத்தில் மோதிய லாரி
|2 Oct 2023 12:15 AM IST
மரத்தில் லாரி மோதியது.
கோவை அடுத்த சோமையம்பாளையத்திலிருந்து பன்னிமடை வழியாக குப்பை லாரி ஒன்று வந்து கொண்டு இருந்தது. இந்த லாரியை வடவள்ளியை சேர்ந்த சுந்தரபாண்டியன் (வயது 30) என்பவர் ஓட்டினார். அப்போது எதிரே வந்த ஆட்டோ மீது மோதால் இருக்க சுந்தரபாண்டியன் சாமர்த்தியமாக செயல்பட்டு பிரேக் பிடிக்க முயன்றார். ஆனால் அதற்குள் லாரி சாலையோரத்தில் இருந்து மரத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் லாரி டிரைவர் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். இதனை கவனித்த அந்த வழியாக சென்றவர்கள், டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக அந்தப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தடாகம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.