தஞ்சாவூர்
அலுவலகத்திற்குள் புகுந்த லாரி
|தஞ்சையில் அலுவலகத்திற்குள் லாரி புகுந்தது.
தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் மேலவஸ்தாசாவடி அருகே சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த சேமிப்பு கிடங்கில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் சேமிக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து பிற மாவட்டங்களுக்கு அரவைக்காக நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றி செல்லப்பட்டு ரெயில் நிலையத்திற்கு எடுத்து சென்று சரக்கு ரெயில்களில் ஏற்றி அனுப்பப்படுவது வழக்கம், அந்த வகையில் நேற்று அரவிந்த் என்பவர் சேமிப்பு கிடங்கில் இருந்து நெல் மூட்டைகள் ஏற்றப்பட்ட லாரியை ஓட்டினார். சேமிப்பு கிடங்கில் இருந்து வெளியே வந்தபிறகு திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த டாரஸ் லாரி சங்க அலுவலகத்திற்குள் புகுந்தது. இதில் அங்கு உட்கார்ந்திருந்த மெலட்டூர் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகன் டிரைவர் விக்னேஷ் (வயது30) மீது லாரி மோதியதில் படுகாயம் அடைந்தார்.தகவல் அறிந்த தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விக்னேசை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.