< Back
மாநில செய்திகள்
சாலை தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்து
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

சாலை தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்து

தினத்தந்தி
|
7 March 2023 7:54 PM IST

சாலை தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்துகுள்ளானது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்-போளூர் நெடுஞ்சாலையில் புதுப்பாளையம் அருகே சாலையின் நடுவே சாலை தடுப்பு சுவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இதுகுறித்து எந்த விதமான எச்சரிக்கை பலகைகளும், ஒளி பிரதிபலிக்கும் ஸ்டிக்கர்களும் பொருத்தப்படவில்லை. இதனால் அந்த வழியாக வரும் வாகனங்கள் தடுப்பு சுவர் இருப்பது தெரியாமல் அதில் மோதி விபத்துகுள்ளாகும் சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில் அந்த வழியாக வந்த லாரி தடுப்பு சுவரில் மோதி விபத்துகுள்ளானது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுப்பு சுவர் குறித்த எச்சரிக்கை பலகை மற்றும் ஒளி பிரதிபலிக்கும் ஸ்டிக்கர்களை பொருத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்