< Back
மாநில செய்திகள்
மீஞ்சூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி ஒருவர் பலி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

மீஞ்சூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி ஒருவர் பலி

தினத்தந்தி
|
6 Jun 2023 2:55 PM IST

மீஞ்சூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் ஒருவர் பலியானார்.

ஆவடி மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பாடியநல்லூர் மொண்டியம்மன் நகர் பகுதியில் உள்ள நேரு தெருவை சேர்ந்தவர்கள் லோகநாதன் (வயது 22), ஐயப்பன் (30). நண்பர்களான இவர்கள் மோட்டார் சைக்கிளில் மீஞ்சூர் அருகே உள்ள புங்கம்பேடு வழியாக திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் லோகநாதன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். மேலும் ஐயப்பன் பலத்த காயமடைந்த நிலையில் பொன்னேரி அரசு பொது ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்