< Back
மாநில செய்திகள்
ராட்சத எந்திரம் ஏற்றி சென்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு
கரூர்
மாநில செய்திகள்

ராட்சத எந்திரம் ஏற்றி சென்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு

தினத்தந்தி
|
25 Oct 2023 12:09 AM IST

தவுட்டுப்பாளையம் போலீஸ் சோதனைச்சாவடி அருகே ராட்சத எந்திரம் ஏற்றி சென்ற லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மதுரை நோக்கி சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ராட்சத எந்திரங்களை ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றுப்பாலத்தில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. தவுட்டுப்பாளையம் போலீஸ் சோதனைச்சாவடி அருகே சென்றபோது அந்த லாரியால் செல்ல முடியவில்லை. இதனால் அந்த வழியாக சென்ற அரசு மற்றும் தனியார் பஸ்கள், கார்கள், லாரிகள், வேன்கள் என அனைத்து வாகனங்களும் பரமத்தி வேலூர் வரை காவிரி ஆற்றுப்பாலத்தில் அணிவகுத்து நீண்ட நேரம் நின்றன. நீண்ட நேரத்திற்கு பிறகு அந்த லாரி மெதுவாக நகர்ந்து சென்றது. இதனால் அந்த லாரியை முந்தி செல்ல முடியாமல் தவுட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் செல்லும் சர்வீஸ் சாலை வழியாக வாகனங்கள் சென்றன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. எனவே தேசிய நெடுஞ்சாலையில் இரவு 10 மணிக்கு மேல் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் செல்ல போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்