< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை எழும்பூரில் ரெயில் என்ஜின் தடம் புரண்டது...!
|10 Jan 2024 2:44 PM IST
தண்டவாளத்தில் இருந்து 3 சக்கரங்கள் கீழே இறங்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில் என்ஜின் தடம் புரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேத்துப்பட்டு ரெயில் பணிமனையில் இருந்து பெட்டிகளை இழுத்து சென்ற ரெயில் என்ஜின் எழும்பூர் ரெயில் நிலைய 1 மற்றும் 2 நடைமேடை நோக்கி வந்து கொண்டு இருந்தது.
அப்போது திடீரென ரெயில் என்ஜின் தடம்புரண்டது. தண்டவாளத்தில் இருந்து 3 சக்கரங்கள் கீழே இறங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஊழியர்கள் ரெயில் என்ஜினை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.